லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.. விஜய் முதல் அஜித் வரை அனைத்து விதமான முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
80ஸ் நடிகர்களில் ரஜினிகாந்த் முதல் சரத்குமார் வரை நடித்து அந்த தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து சினிமாக்களில் பல்வேறு விதமான வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட நயன்தாரா இன்று வரைக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்படுகிறார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
சர்ச்சைக்குரிய அந்த திருமணத்தின் பிறகு, இரட்டைக் குழந்தைகள் பிறந்தது ரசிகர்களிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணமான ஆறு மாதங்களில் எளிய குழந்தைகள் பிறந்ததால் அது எப்படி சாத்தியம்.. என்பது போன்ற பிரச்சனைகளையும் அவர்கள் சந்தித்தனர்.
ஒரு வழியாக அந்த பிரச்சனைகளை சமாளித்த அந்த தம்பதிகள், தொடர்ந்து மீடியாக்களில் தங்களது திருமணம் மற்றும் குழந்தைகள் பற்றி கேள்விகளுக்கு பேட்டியில் பதில் அளித்தனர்.
இதன் பிறகு அவர் அவர் தொழில்களை தொடர்ந்து செய்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்கள் முதல் ஓராண்டு வரை குழந்தைகளை மீடியாவிற்கு காட்டாமல் இருந்தனர்.
தற்பொழுது நயன்தாரா தன்னுடைய இரட்டை குழந்தைகளை இருவரையும் எடுத்து வந்து ஸ்டைலாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.