பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்படும் சீரியல்கள் நடிக்கும் சின்னத்திரை சீரியல் நடிகர்களின் காதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இரு ஜோடிகளும் ஒரே நேரத்தில் சுற்றுலா சென்று அங்கு ஒன்றாக இருந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி இவர்களது காதல் ரகசியங்களை ரசிகர்களின் மத்தியில் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.
அரசல் புறசலாக இருந்த இவர்களது காதல் பற்றிய கிசுகிசுக்கள் தற்பொழுது உறுதியான நிகழ்வாக வெளியான அந்த வீடியோக்கள் உறுதி செய்துள்ளனர் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் நடித்த அருண் பிரசாத் ராஜா ராணி தொடரில் நடித்த வி ஜே அர்ச்சனாவே காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அருண் பிறந்தநாள் விழாவின் பொழுது, அதில் கலந்து கொண்ட அர்ச்சனா அவருடன் நேரம் செலவிட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வெளியாகி அவர்களுக்கிடையே ஆன காதலை உறுதிப்படுத்தி உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
இருவரும் சென்னைக்கு அருகே உள்ள சதுப்பு நில காடுகளில் பயணம் செய்த வீடியோ அவரவர் இணையதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இருவரும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் பகிர்ந்துள்ளதால் அவர்கள் கிடையாத காதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.