2005 ஆம் ஆண்டு வெளிவந்து உலகெங்கும் வெற்றி நடை போட்ட திரைப்படம் அந்நியன்.
அந்த காலகட்டத்தில் அதிக பட்ஜெட் போட்டு எடுத்த திரைப்படம் என்ற பெயரை திரைப்படம் பெற்றது.
இதில் நடித்த விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது. விக்ரம் தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களை வெவ்வேறு விதமான வித்தியாசமான நடிப்புகளில், பாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்ச்சியில் . ஆழ்த்தினார்.
இந்த திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
அப்பொழுது திரைப்படம் 60 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது. அப்போதைய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆனது தற்பொழுது 4k வர்ஷனில் வெளியிடுவதற்கு திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படமானது வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வசூலை அள்ளிக் குவித்தது.
அந்நியன் போர்க்கே திரைப்படமும் அதே போன்று புதிய தொழில்நுட்பத்தில் வெளிவந்து பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.