நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். . துவக்கத்தில் அவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்டது.
அதனை பிறகு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் குறிப்பிட்ட அளவிற்கு வசூலை அள்ளிக் குவித்தது.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், அவ்வப்போது தான் வளர்ந்த வளர்த்து விட்ட விஜய் டிவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த டிவியில் ஒளிபரப்பப்படும் சினிமா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை அடுத்து, சிவகார்த்திகேயன் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும் அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒரு சில புகைப்படங்கள் வெளியான நிலையில், அத்த திருமணத்தின்போது சிவகார்த்திகேயன் மிக ஒல்லியாக காணப்படுகிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் இது நம்முடைய சிவகார்த்திகேயன் தானா என ஆச்சரியப்பட்டு அப்ப புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.