மாவீரன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து தற்பொழுது வசூல் வேட்டையில் சக்கை போடு போட்டுக்க்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டைரக்டர் சங்கரின் மகள் அதிதி அவர்கள் நடித்திருக்கிறார்கள்.
நேற்று முந்தைய தினம் வெளியாகி வெற்றிகரமாக முதல் நாளிலேயே சென்னையில் மட்டும் 100 கோடி வசூலித்ததாக ஒரு செய்தி புள்ளி விபரம் தெரிவித்தது.
எனினும், சரியான தகவல்கள் வரவில்லை. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படம் சரிவர வசூல் ரீதியில் வெற்றி பெறாத தால், "மாவீரன் படத்திற்காக அவர் கணிசமாக தன்னுடைய சம்பளத்தை குறைத்து விட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
உறுதிபடுத்தப்படாத அந்த தகவலால் நடிகர் சிவகார்த்திகேயன் டென்சன் ஆகியிருப்பதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரே தான் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று கூறும் வரை இதுபோன்ற புரளிகள் கிளம்புவதை தவிர்க்க , தடுக்க முடியாது.