நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்த நடித்த திரைப்படம் ரஜினி முருகன். திரைப்படம் வெற்றி பெற்றது அடுத்து, சினிமாவில் பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து, தன்னுடைய சினிமா கரியரில் தனக்கென ஒரு புதிய பாணியை ஏற்படுத்தி, தமிழ் சினிமா உலகில் நிரந்தர இடம் பெற்றவர்.
இவர் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நடித்து வெளிவந்த திரைப்படம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தையும் நற்பெயரையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் திடீரென கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ஒரு புகைப்படத்தின் மூலம் ஒரு பெரிய சர்ச்சை நடந்து முடிந்த நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தன்னுடைய நண்பர் என்றும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மீடியாவில் செய்திகள் வெளியாகி என.
அதை மறுத்த கீர்த்தி சுரேஷ், என்னுடைய சினிமா கருகிறேன். செல்ல வேண்டிய பயணம் தொலைதூரம் உள்ளது என்றும், அதற்குள் என்னை திருமண வாழ்க்கையில் தள்ளிவிட எதற்கு இந்த அவசரம் என்றும் ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பியிருந்தார்.
மீண்டும் அவர் திரைப்பட வாய்ப்புகள் மிகக் குறைந்த நிலையில், வீட்டில் திருமண பேச்சு எடுப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து இது போன்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் கூலாக, எனக்கு ஏற்ற மாப்பிள்ளை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு பிடித்தவராக இருந்தால் நிச்சயமாக அவரை திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் என்று தெரிவித்துள்ளார்.
அப்படி யாராவது உள்ளார்களா தற்பொழுது என்ற கேள்விக்கு, லேசாக புன்னகை புரிந்து, இன்னும் இல்லை என்று தெரிவித்திருந்தார். எனினும் பாலிவுட் ஸ்டாரை ஒருவரை அவர் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசு வெளியாகி உள்ளது.