தமிழ் சினிமாவில் ஒரு அழகு ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறினார்.
தமிழில் ஒரு சில முன்னணி கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்த பூமிகா, தெலுங்கில் மிக அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போதுள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களுடன் பத்ரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
2000 ஆண்டு வாக்கில் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய மிகப்பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு திருமண வாழ்வில் ஈடுபட்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.
தற்பொழுது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரவும் பூமிகா, அவரது கணவர் மற்றும் மகனுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளார்.
புகைப்படத்தில் இருக்கும் அவரது மகன் அவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்து விட்டிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் "நடிகை பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா"? என்று ஆச்சர்யத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.