உலகில் எங்கு போனாலும் தமிழர்கள் பொறுத்தவரை இந்த சாதிப்பை ஒழியவே ஒழியாது போல இருக்கிறது. அதை வைத்து இந்த உலகத்தையே வாங்குவது போல எங்கு சென்றாலும் நீ என்ன சாதி என்று கேட்டு ஒரு சிலர் இன்னும் அந்த பழங்காலத்திலேயே ஊறி போய் கிடக்கின்றனர்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு சூப்பர் சிங்கர் பங்கேற்பாளர் அருணா அவர்களுக்கும் பொது இடங்களில் பாடி முடித்து பிறகு அங்கு திறனும் ஒரு சிலர் நீங்கள் என்ன சாதி என்று கேட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவில் பாட சென்ற பொழுது அங்கு பாடி முடித்த பிறகு அங்கிருந்து அவர்கள் தன்னை கேள்வி கேட்டதாகவும், அப்பொழுது மனதிற்கு ஒரு வித நெருடல் பயம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இனி எங்கு சென்றாலும் தைரியமாக பாடலாம் என்று நெகிழ்ச்சியாக அது குறித்த அனுபவத்தை மேடையில் பகிர்ந்துள்ளார்.
திறமைக்கும் சாதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த பொழுதும் சாதிக்கொடுத்த தகவல்கள் மற்றும் அவர்கள் பற்றிய பின்னணி தெரிந்து கொள்வதில் மனிதர்கள் காட்டுவது என்பது இன்னும் கண்மூடித்தனமான பிற்போப்பு எண்ணங்கள் மறையவில்லை என்பதை தான் காட்டுகிறது.