இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலமான சின்னத்திரை பிரபலம் நடிகர் கே பி ஒய் பாலா.
ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் பணிபுரியும் பொழுது, மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பாலா, சமீப காலங்களாக வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைகள் மற்றும் இயலாதவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து கொண்டு வருகிறார்.
உதவி என்று வருபவர்களுக்கு, எங்கெங்கு உதவிகளை கேட்டு பெற முடியுமோ அங்கெல்லாம் கேட்டும், தன்னுடைய வருமானத்தில் வரும் பணத்தை அத்தனையும் தன் தேவைகளுக்கு போக மீதம் உள்ளதை. அப்படியே ஏழைகளுக்கு பண உதவியாக பொருள் உதவியாகவும் செய்து கொண்டு வருகிறார்.
தொடர்ந்து உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலாவின் புகழ் உலகெங்கும் இணையத்தின் மூலம் பரவி வருகிறது. அவர் செய்யும் உதவிகளையும் வீடியோக்களாக பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவ்வாறு செய்யும் உதவிகளுக்கு எந்த ஒரு கைமாறும் எதிர்பார்க்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று செய்து வருகிறார்.
இவரது நலன் விருதுகள் தொடர்ந்து இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை அத்தனையும் செலவு செய்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உதவி பெற்ற மக்கள் அனைவரும் என் சொந்தங்கள் தானே அவர்கள் என்னை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒரே வரியில் முடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ஏழைகளுக்கு உதவி வரும் கே பி ஒய் பாலா வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாகவும், முடிக்கணக்கான பண பரிமாற்றங்கள் நடந்து வருவதாகவும் சில சமூக உலக பதிவுகள் உள்ளன.
ஆனால் அவர் எந்த ஒரு தனி நபர் அல்லது நிறுவனங்களை சார்ந்து இல்லை என்பது அனைவரும் அறிந்த. விஷயம் . இருவரும் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு தான் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்
கோடிகளில் அவர்கள் புரளுவதாக சொல்வது அவர் சம்பாதித்த புகழ்கள் தானே ஒழிய பணங்கள் அல்ல. நல்ல மனம் கொண்ட பாலா உதவி செய்வதை பார்த்து ஏற்கனவே அதே போல் உதவி செய்து வரும் ராகவா லாரன்ஸ், அவருடன் இணைந்து தன்னாலான பங்களிப்பையும் உடன் இணைந்து செய்து வருகிறார்.
இதுபோன்று, தேவைக்கு அதிகமான பணம் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தொழில் செய்யவும், இருப்பிடங்கள் வசதி செய்து தரவும், முன் வந்தால் பொருளாதாரத்தை பின்தங்கி இருக்கும் ஏழை மக்கள் வெகு விரைவில் உயர்ந்து இருந்த நாட்டின் உடைய பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இருவருக்கும் நம்முடைய இணையதளத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.