டாடா படத்திற்காக சிறந்த நடிகைக்கான FILMFARE விருது வாங்கிய நடிகை அபர்ணாதாசின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!..
கேரளாவில் பிறந்து, மஸ்கட் நாட்டிற்கு குடிபெயர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்த மகள் தான் அபர்ணா தாஸ். வெளிநாட்டில் பிறந்திருந்தாலும், இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தது கோவையில் தான். மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகமான அபர்ணா தாஸ், தளபதி விஜயின் "பீஸ்ட்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான நடிகர் கவினின் "டாடா" திரைப்படத்தில் நாயகியாக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை அபர்ணா தாஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் டாடா படத்தில் சிறந்த நடிகைக்கான விருது வாங்கியுள்ளார்.
தற்போது அவர் பிலிம் ஃபேர் விருதுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன.