தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகர் விஷால். முன்னணி நடிகர்களில் ஒருவரான இவருக்கு இப்பொழுது திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பு அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதன் பிறகு சில காரணங்களால் அவரது திருமணம் தடைபட்டது. இதனால் கொஞ்சம் மன கஷ்டத்தில் இருந்தார் விஷால்.
திடீரென திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில் இருந்த விஷால் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடிகை நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஷால் உடனும் நடித்திருக்கிறார். பூஜை திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.