நடிகை லட்சுமிமேனனுக்கு திருமணமா?. மாப்பிள்ளை இந்த நடிகரா?

 

lakshmimenon marriage

கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லஷ்மி மேனன்.

15 வயதிலேயே இவர் நடிக்க வந்து விட்டார். அதன் பிறகு ஓரிரு தமிழ் படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


தொடர்ந்து படிப்பை முடித்த லட்சுமி மேனனுக்கு மறுபடியும் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க ஆரம்பித்த லட்சுமி மேனனுக்கு தற்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக சமூக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

அவருக்கு தற்பொழுது 27 வயது ஆகிறது. 27 வயதான லட்சுமிமேனனுக்கு திருமணத்திற்காக பார்க்கப்பட்ட மாப்பிள்ளை ஒரு பிரபல நடிகர் என்று கருதப்படுகிறது.

அந்த நடிகர் யார் என்பது என்பது குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக நடிகர் விஷாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு லஷ்மி மேனன், அவருடன் தான் திருமணம் என்ற ஒரு தகவலும் பரவி இருந்தது.

இறுதியில் அது உண்மை இல்லை வெறும் கிசுகிசு தான் என்ற அளவில் இருந்தது.

மீண்டும் லட்சுமி மேனனுக்கு திருமணம் என்ற தகவல் பரபரப்புக்காக பரப்பப்பட்டதா அல்லது உண்மையிலேயே லட்சுமி மேனனுக்கு திருமணமா என்பது குறித்து நம்பத் தகுந்த தகவல்கள் ஏதுமில்லை.

Post a Comment

Previous Post Next Post