செடி வளர்க்கும் ரம்யா பாண்டியன்.... ! விவேக் விட்டு சென்ற பணியை தொடரவும் நடிகை..!
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரியதாக சென்று சேரவில்லை.
இதனை அடுத்துரம்யா பாண்டியன் என்ற நடிகை யார் என்ற தொனியில் கேள்வி கேட்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து தன்னுடைய முயற்சியை கைவிடாத ரம்யா பாண்டியன் அவர்கள், பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பிரபலமானார்.
முன்னதாக அவர், சமூக இணையதளங்களில் வெளியிட்ட இடுப்பு மடிப்பு சேலை புகைப்படங்கள் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.
அந்த புகைப்படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வந்தது.
அதன்பிறகு அவருக்கு பிக் பாஸ் போர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோ ஒன்றிலிருந்து நடுவராக பணியாற்றி இருந்தார்.
இவர் மீண்டும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். திரைப்படத்தின் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு தன்னுடைய சமூகம் இணையதளமான இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக ரசிகர்கள் விரும்பும் படியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.
அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் சமூக பணிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் விவேக் அவர்கள் விட்டுச் சென்ற மரம் நடும் பணிகளை இவர் தொடர்ந்து இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.