ஒரு சில நடிகர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, வருடங்கள் பல ஆனாலும் கூட அவர்களை நினைவில் விட்டு மாறாமல் மறையாமல் இருப்பார்கள்.
அந்த வகையில் நமது எதிர்நீச்சல் குணசேகரன் அவர்களும் மக்கள் மனதில் என்றும் கூட நீங்காமல் இடம் பெற்று இருக்கின்றார்.
கிராமப் பகுதிகளில், தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் பார்த்து வரும் வயதானவர்கள், குணசேகரன் ஏன் வரவில்லை என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.
அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியாத அவர்கள், அதையும் நாடகமாக தான் கருதுகின்றனர்.
அந்த அளவிற்கு மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற ஒரு சின்னத்திரை நடிகராக மாறி உள்ளார் நடிகர் மற்றும் இயக்குனர் ஆதி குணசேகரன்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகருக்கு பதிலாக வேறு யார் நடிப்பார்கள் என்ற ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் கூட, அந்த பாத்திரத்தை நிரப்புவதற்கு எந்த ஒரு நடிகராகவும் முடியாது என்பதாக மக்கள் கருத்து உள்ளது.
அவரைப் போன்ற தோற்றத்திலும் நடிப்பிலும் மற்ற எவரும் வரவே முடியாது என்று அவர்கள் நம்புகின்றனர்.