லோகேஷ் கனகராஜ் என்ற இளம் இயக்குனர், விக்ரம் படத்தை இயக்குதின் மூலம் மிகப் பிரபலமடைந்தார்.
நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல் அவர்களின் திரைப்படம் ஒன்று பிளாக்பஸ்டர் ஆனது இவரின் இயக்கத்தால் தான் என்று அனைவரும் நம்பினர்.
முன்னதாக கைதி என்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை விருந்தை படைத்தார்.
அதிலிருந்து அவருடைய திறமைகள் உலகம் முழுவதும் பரவியது.
விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு, தமிழ் திரையுலகில் உச்சபட்சத்தில் இருக்கும் நட்சத்திரமான விஜய் அவர்களுக்கு இயக்குனராக லியோ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 90 சதவீத வேலைகள் முடிந்த நிலையில், திடீரென நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்,
அதனால் லியோ படத்தில் இருந்து டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விலகி உள்ளார் என்றும் முதலான சமூக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தன.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் சந்திக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, அந்த புகைப்படம் தான் லியோ படத்தில் இருந்து அவர் விலகுவதற்கு காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதாவது ரஜினிகாந்த் அவர்களுக்கு படம் இயக்குவதற்காக லியோ படத்தில் இருந்து விரைவாக வெளியேறியதாக ஒருதலை பட்சமான நம்பிக்கை இல்லாத தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இருந்து விலகியதாக அவர் மூலமாக அல்லது அலுவலக ரீதியாகவோ எந்த ஒரு தகவலும் இல்லை.