Labels

போர் தொழில் நடிகர் காதல் திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா? அவரும் பிரபல நடிகை தான்..!

ashok selvan gets married

போர் தொழில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் அசோக் செல்வன்.

சரத்குமார் உடன் இணைந்து நடித்த அந்த திரைப்படம் ஆனது வெற்றி படமாக அமைந்தது.

முன்னதாக அசோக் செல்வன் அவர்கள் தெகிடி மன்மத லீலை சவாலே சமாளி உவமை கடவுளே ஹாஸ்டல் பீட்சா 2 சூது கவ்வும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழக ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக மாறிப் போனார்.

இந்நிலையில் இன்று அவருக்கு பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் அருண்பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன். இவரைத்தான் அசோக் செல்வன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அளிக்கப்பட்டு திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.

அதன் பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி பாண்டியன் அவர்கள் அன்பிற்கினியால் தும்பா போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.