ஆதி குணசேகர் நாக நடிக்கும் வேலராமமூர்த்தி.. .. வெளிவந்த புதிய தகவல்கள்!
ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சினிமா நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
இந்த நாள் ரசிகர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு, அவருடைய இழப்பை தாங்காமல் இன்று வரை அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 30 ஆண்டுகளாக சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பயணித்து வந்த நடிகர் மாரிமுத்து அவர்கள், திடீரென காலமானார் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரசிகர்கள் என ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே அவருடைய இழப்புக்கு ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் நடித்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், சன் டிவி தரப்பானது எழுத்தாளர் மற்றும் நடிகருமான வேலராம மூர்த்தி அணுகி, நீங்கள் அந்த பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பீர்கள் என நடிக்க கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
ஆனால் வேலராமமூர்த்தி அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், வீட்டுக்கு சென்ற 20 நாட்களுக்கு மேல் ஆகிறது என்ற நிலைமையில் பதில் அளித்துள்ளார்.
இதுவரைக்கும் அந்த தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் அவர் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இரு தரப்பிலிருந்து இன்னும் அவர் அந்த பாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்து ரசிகர்களை தெரிவித்து படுத்த வேண்டும் என்ற விஷயங்களை உறுதிப்படுத்தாமல் உள்ளனர்.
இது குறித்து திரு வேல ராமமூர்த்தி அவர்கள் பேசும் பொழுது, திரு மாரிமுத்து அவர்களுடன் ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும், அவருக்கு இணையாக ஈடு செய்யும் விதத்தில் அவர் நடித்த ஆதிபனை சேகரன் பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடிக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது தான் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் சன் டிவி நெட்வொர்க் தன்னை அணுகியதால் அது குறித்த ஆலோசனைகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், நடிக்கும் பட்சத்தில் அதை உறுதிப்படுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்துவாயாகவும் தெரிவித்தார்.