சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மாறி நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் பலர். அதற்கான வாய்ப்பை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக நடிகர்களாக காமெடி செய்பவர்களாக கலந்து கொள்பவர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் பெரிய திரை என சொல்லப்படுகின்ற சினிமாவிற்கு வருகை தந்து நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு மாறி வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன்.
தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் நடித்து வரும் வாத சினிமா நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த போது அவருக்கு நேர்ந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
முந்தைய தினம் அவருக்கு பீரியட்ஸ் டைம் என்பதால், சரியான தூக்கமின்மையை காரணமாக முகம் வீங்கி காணப்பட்டதாகவும், அதனால் உடல் நிலையில் சற்று தளர்வு ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் மீடியா மற்றும் சமூக இணையதளங்களில், அவர் முகத்திற்கு பிளாஸ்டிக் செய்திருப்பதாக தகவல்களை பரப்பினர்.
உண்மையிலேயே, முகத்திற்கு தான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என்றும், உடல்நிலை காரணமாக தான் துவக்கம் இன்மை பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக முகம் வீங்கி காணப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அப்பொழுது அந்த நிகழ்ச்சியின் போது உடல் ரீதியாக பாடி சேம் செய்ததாக குறிப்பிட்டார்.
இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும், இதுபோன்று கூட பேசுவார்களா..? என தான் நினைத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனைகள் என்பது ஏற்படும் உடல் பாதையில் பக்க விளைவுகள், தனக்கும் ஏற்பட்டதாகவும் அதை போய் இப்படி ஒரு செய்தியாக திரித்து வெளியிடுவது தனக்கு மனவேதனையை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக வாணி போஜன் மிரள், ஓ கடவுளே, லவ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments