Labels

அரவிந்த்சாமி என் மகன் அல்ல... வெளியான புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்...!

aravinda samy delhi kumar

ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் உலகம் எங்கும் பிரபலமானவர் தமிழ் நடிகர் அரவிந்தசாமி.

96 கிட்ஸ்களுக்கு ஆதர்ஷினி நாயகனாக, ரசிகர்களுக்கு கனவு கதாநாயகனாக இருந்தவர் தான் நடிகர் அரவிந்தசாமி.

அந்த அளவிற்கு அழகான தோற்றம் கொண்ட அரவிந்தசாமி அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தமிழர்கள் ரசிகர்களிடையே நீங்காத இடம் பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த பாஸ்கர் அண்ட் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படத்தில் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமா துறையை விட்டு சற்று விலகி இருந்தார்.

relationship


அந்த நிலையில் சமூக இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவரைப் பற்றிய வதந்திகள் வெளிவந்து வண்ணம் உள்ளன.

சாமி அவர்கள் ஒரு பிரபல நடிகரின் மகன் என்றும், அதை இவ்வளவு காலங்களும் வெளியில் சொல்லாமல் இருந்தது என்ன காரணம் என்று அவரது தந்தையும், நடிகர் மன டெல்லி குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

உண்மையிலேயே அவர் என்னுடைய மகன் இல்லை என்று அவர் தெரிவித்ததன் மூலம் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

அவர் அப்படி சொன்னதற்கு காரணம் சிறு குழந்தையிலேயே அவருடைய உறவினர் ஒருவருக்கு தத்து கொடுத்து விட்டதால், எப்பொழுதும் அவரிடம் அவர் அந்த குடும்பத்துடன் அவர் இருந்ததால், எந்த நிலையில் அவர்தான் என்னுடைய மகன் என்பதை அவரும் சரி நானும் சரி பொதுவெளியில் அதைப் பற்றி பேசுவதில்லை என தெரிவித்தார்.

சினிமா கதாநாயகனாக பிரபலமான போது கூட அதை வெளிப்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் அதுதான் என்று அவர் தெரிவித்தார். சினிமாவில் கூட அப்பா மகனாக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர், ஒரு நடிகராக எனக்கு யார் எவர் என்ற பேதம் இல்லாமல் நடிக்க வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் நடிகர் டெல்லி குமார் அவர்களின் மகன் அரவிந்த்சாமி என்பது அவர் வாயிலாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் சட்ட ரீதியாக அவர் அவருடைய மகன் இல்லை என்பதுதான் மிக சரியான பதிலாக இருக்கும்.