எதிர்நீச்சல் தொடரில் மிகச் சிறப்பாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து (ஆதி குணசேகரன்) அவர்கள் சற்று முன்பு இயற்கை எய்தினார்.
ஏற்கனவே இதய நோய் , மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் தொடர்ந்து அதற்கு மாத்திரைகள் கொண்டு வந்தார்.இவர் சினிமா துறைக்கு வந்து ஆண்டுகள் பல ஆன நிலையில், தற்பொழுது தான் குறிப்பிட்டு சொல்லும் படியான, திரைப்படங்கள் மற்றும் சின்ன திரை சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி வந்தார்.
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் வில்லனாக நடிக்கும் இவர், நிஜ வாழ்க்கையில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடியவர்.
கடவுள் நம்பிக்கை அற்றவர். ஷூட்டிங்கிற்கு சென்று, அங்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த நிலையில் , திடீரென மாரடைப்பால் அவர் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்நீச்சல் தொடரில் அவர் பேசிய வசனம்.... தற்பொழுது உண்மையாகவே நடந்து விட்டது... இதை நினைத்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்....
#Marimuthu pic.twitter.com/r3suREzNLE
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) September 8, 2023
Tags: tamil cinema, marimuthu, ethir neechal