சினிமா உலகம் என்றாலே அது மிகப்பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த உண்மையான நேர்மையானவர்கள் இருப்பவர்கள் என்றுதான் பொதுமக்கள் கருதி கொண்டு உள்ளனர்.
சினிமா திரையில் பார்க்கும் முகங்கள் வேறு... உண்மையான அவர்களுடைய முகங்கள் வேறு.. இது அந்த திரை துறையில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
பொதுவாக மனிதர்களிடையே ஒருவருடைய வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்வதும், அந்த பொறாமையால் அவர்களுக்கு எப்படியாவது ஒரு கலங்கத்தை உருவாக்கவும் முயற்சி செய்வார்கள்.
அது சினிமாவில் மட்டும் விட்டு வைக்காமல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி ஒரு நடிகர் அவதூறுகளை அள்ளி தெளித்துள்ளார்.
தொடக்கத்திலேயே இயக்குவதில் வல்லவராக இருந்தால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஆரம்ப திரைப்படமான மாநகரம் திரைப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கி மக்களிடையே கொண்டு சேர்த்திருந்தார்.
அந்த இயக்கத்தினை அடுத்து நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமா திரை உலகிற்கு மிகச் சிறந்த ஒரு இயக்குனர் கிடைத்திருப்பதாக அந்த திரைப்படத்தை பார்த்த சினிமாவல்கள் உட்பட சாதாரண ரசிகர்கள் வரை அனைவரும் கருதினர்.
அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியான கமல் நடித்த விக்ரம் பார்ட் 2 திரைப்படம் ஆனது இமாலய வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை யாருடா இவர் என திரும்ப பார்க்க வைத்தது இவரது இயக்கம்.
அதனைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகன் அனைவரும் இவருடைய இயக்கத்தில் நடிக்க மாட்டமா என்று ஏங்கி, அவருடைய கதைக்காக காத்திருப்பதாக வெளிப்படையாகவே பேட்டியில் கூறி வருகின்றனர்.
என்ன நிலையில் முன்னணி நடிகரான விஜய் அவர்களுக்கு லியோ என்ற திரைப்படத்தை இயக்கி, அந்த திரைப்படத்தை வெளியிடும் தருவாயில் உள்ளார்.
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார். பட விழாவின்பொழுது லோகேஷ் அவர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படமே இயக்கத் தெரியாத நிலை இருந்தது. ஏனென்றால் அவர் எந்த ஒரு இயக்குனர் இடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை.
ஆனால் தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை இயக்க கற்றுக் கொண்டு விட்டு, அவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதை தன்னுடைய இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
அவருடைய தனிப்பட்ட கடின உழைப்பின் காரணமாகத்தான் இவ்வளவு தூரம் அவர் உயர்ந்துள்ளார் எனவும், இதனால் தனக்கு பொறாமையாக உள்ளதாக ஒரு நேர்காணலில் நடிகர் மகேந்திரன் கூறியுள்ளார்.