பிரபல தமிழ் நடிகை மற்றும் டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் வல்லவராக இருந்தார்.
குற்றம் செய்தவர்களை, அவர்களின் குற்றங்களை உணர வைத்து அதிலிருந்து வெளிவரவும், தண்டனைக்குரிய குற்றம் என்றால் உரிய முறையில் போட்டு கொடுத்து அவர்களை காவல் நிலையத்தில் நேர்மையாக நடந்து கொண்டவர்.
பலர் குடும்பங்களில் உள்ள விஷயங்களை வெட்டவெளிகளில் பேசுவது நாகரீகம் அற்றது என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைத்த பொழுதும் கூட, பணத்திற்காக குடும்பமானங்களை வெளியில் பேசி தூண்டுகிறார் என்று அவர் மீது வன்பங்களை கொட்டிய பொழுதும் கூட தான் நடத்திய நிகழ்ச்சியை நேர்மையாகவும் திறமையாகவும் நடத்தி வந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியின் மூலம் பல குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளதாக அந்த குடும்பங்களை சேர்ந்த நபர்களே தெரிவித்த பொழுதுதான் அந்த நிகழ்ச்சி பற்றிய. மற்றொரு புறம் தெரிய வந்தது.
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு சில படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாவானது ஒரு சிலர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கு ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து உலகையே இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்பது வெளிவரும் அதிர்ச்சிகரமான தகவல்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில பல முதலைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை.
என்னதான் திறமையும், வசதிகளும் வளமும் இருந்தால் கூட அவர்கள் நினைத்தால் சினிமா எதிர்காலத்தை உண்டு பண்ணாமல் செய்துவிடுவார்கள் என்பது தான் உண்மை என்பது போல் அவனுடைய பேட்டி அமைந்துள்ளது.