பிரபல குணச்சித்திர நடிகர் ஆர் எஸ் சிவாஜி காலமானார்..! அவருக்கு வயது 67...!

 

rs sivaji dead

நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழகமெங்கும் ரசிகர்களை கொண்டவர். ஆர் எஸ் சிவாஜி

சமீபத்தில் வெளியான கார்த்தி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தார்.

rs sivaji dead


கமலஹாசன் படங்களைப் பொறுத்தவரை, , மைக்கேல் மதன காமராஜன் அபூர்வ சகோதரர்கள், குணா, சத்யா, உன்னை போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ஆர் எஸ் சிவாஜி அவர்களின் மறைவு ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழம்பெரும் நடிகரான ஆல்பம் சந்தானத்தின் மகன் இவர். கரகாட்டக்காரன் படத்தில் நடித்த வில்லன் நடிகர் சந்தான பாரதியின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்.

இவரது மறைவு குறித்து கோலிவுட் வட்டாரங்கள் மிகப்பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.