நடிகர் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். திரையுலகை தாண்டி தமிழக மக்களுக்காக தனி கட்சியை துவங்கி, தமிழ்நாட்டின் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை கோளாறு காரணமாக, வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த திரு விஜயகாந்த் அவர்கள் பேசுவதற்கும், நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார்.
இந்நிலையில் மீண்டும் விஜயகாந்து அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து அவருடைய உடல் நிலையை சீராக்கி, நூறு வயது வரை அவரை வாழ வைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.