நடிகர் ஆர்யாவின் சைந்தவ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.
இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.
மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அதில் முக்கிய எட்டு நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் ஆர்யாவுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.