இந்திய சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் திரைப்படங்கள் மிகப் பிரசித்தம் பெற்றவை. அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உலக அரங்கில் பிரபலமாகின்றனர்.சினிமா கோலிவுட் பொறுத்த வரைக்கும் புது முக நடிகைகள் அதிக நாட்கள் சினிமாவில் நிலைப்பதில்லை. காரணம் வயோதிகம் மற்றும் சொந்த வீட்டுப் பிரச்சினைகள் போன்றவைகளால் விரைவில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் நடிகைகளில் சிலர் மட்டும் தொடர்ந்து பத்து பதினைந்து ஆண்டுகளாக நடித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நயன்தாரா திரிஷா மற்றும் சமந்தா போன்றவர்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகவே நடித்துக் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இளம் நடிகையான சமந்தா கடந்த சில ஆண்டுகளில் அதிகமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அவருக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான தோல் அலர்ஜி நோயால், சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அதற்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
அதன் பிறகு அது முற்றிலும் குணமாகி விட்டதாகவும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் தேடி வருவதாகவும் சினிமாவில் மட்டுமே நடிப்பதாகவும் தெரிவித்த சமந்தா பாதியில் நிறுத்தி இருந்தால் திரைப்படங்களை முடித்துக் கொடுத்தார்.
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று சமந்தா இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அதற்கு அவருக்கு வந்த அந்த வித்தியாசமான நோய் தான் காரணம் என்று தெரிவிக்கிறது.
உண்மையில் அதுதான் காரணமா? இல்லை சொந்த பிரச்சனையா என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். எது எப்படியோ மீண்டும் சமந்தாவை திரையில் பார்த்தால் மிக மகிழ்ச்சி என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.