KPY தீனாவின் திருமண புகைப்படங்கள் அவங்க மனைவியா இது


KPY தீனாவின் திருமண புகைப்படங்கள் அவங்க மனைவியா இது

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர், ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளனர். ரோபாே சங்கர், சிவகார்த்திகேயன் என அந்த பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது. அதில் ஒருவர் தான் தீனா.



முதலில் இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநராக பணிபுரிந்த தீனா, மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் களமிறங்கினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தீனாவிற்குள் அபாரமான திறமை ஒளிந்திருப்பதை பார்த்தவர்கள் அவரை மேலும் ஊக்கப்படுத்தினர். பின்னர் தீனாவின் கவனம் சினிமா மீது திரும்பியது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு மேடை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக வலம் வருகிறார்.



இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் தனது சொந்த ஊரில் சொந்தமாக வீட்டைக் கட்டி முடித்த தீனாவுக்கு இன்று திருவாரூரில் திருமணம் நடக்கிறது. இது குறித்து முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள தீனா, ”படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் பலருக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுக்க முடியவில்லை. 



அதனால் தான் திருமண வரவேற்பை சென்னையில் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.


 மணப்பெண் கிராஃபிக் டிசைனரா இவங்க இருக்க அழகுக்கு வேற யாரைவது கல்யாணம் செய்து இருக்கலாம்னு கேட்ட தீனா எனக்கு மனதளவில் பிடித்திருப்பதால் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறுவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.