தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இடையேயான திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வர இந்த ஒரு சம்பவம் தான் காரணம் என்று பலராலும் கூறப்படுகிறது.
தனுஷ் முன்னணி நடிகரான பிறகு ஒவ்வொரு திரைப்படத்தையும் கதைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு மெருகேற்றி, மிகப் பிரமாண்ட வெற்றியை கொடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேர்ந்ததும், படிப்பு தளத்தில் உடன் நடிக்கும் நடிகையுடன் நட்பும் அவருடைய திருமண பந்தத்திற்கு மிகப்பெரிய பிரிவினைக்கு காரணமாக இருந்தது என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக ஊடகங்களில் தனித்தனியாக செய்திகளை வெளியிட்டனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தினர் அதில் தலையிட்டு, இருவரையும் சமாதானம் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர்.
ஆனால், அவரவர் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இருவரும் பிரிவதாக வெளிப்படையாகவே சமூக இணையதளங்கள் மற்றும் ஊடகங்களில் அறிவித்து இருந்தனர்.
அதன் பிறகு தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தனுஷ் ஐஸ்வர்யா அவர்கள் அவர் அவர்களின் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வப்பொழுது தன்னுடைய மகன்களை பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் பார்த்து அவர்களுடன் பங்கேற்று வரும் இந்த தம்பதியினர் இன்னும் முழுமையாக விவாகரத்து பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்ப பிரச்சனைக்கு முதல் காரணமாக ஒரு பிரபலமான நடிகை இருந்தார் என்று தகவல்கள் தெரிவித்து இருந்தனர்.