நடிகை சதாவுக்கு திருமணம் ஆகாமல் இருக்க இப்படி ஒரு காரணமா?கேட்ட நீங்கலே ஹாக் ஆயிருவிங்க...
நடிகை சதா தமிழில் 2002ம் ஆண்டு ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமான ஜெயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி 2018ம் ஆண்டு தனியார் வங்கியில் கடன் வாங்கி டார்ச் லைட் என்ற படத்தில் நடித்து தயாரித்தும் இருந்தார்.
39 வயதான நடிகை சதா இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். எனவே அதில் எனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ளார்.