பாக்கியலட்சுமி சீரியல்ல இருந்து கோபி கெளம்பிட்டாரா?

 

பாக்கியலட்சுமி சீரியல்ல இருந்து கோபி கெளம்பிட்டாரா?



பாக்கியலட்சுமி சீரியலில் சொன்ன தேதிக்கு முன்பாகவே மொத்த பணத்தையும் கொடுத்து கோபி தலையில் இடியை இறக்குகிறாள் பாக்யா. இதை சற்றும் எதிர்பார்க்காத அவன், நீ பணத்தை கொடுத்தாலும் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன் சொல்லி  திமிராக பேசுகிறான். பின்னர் அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வீட்டை விட்டு வெளியே அனுப்பி கேட்டை இழுத்து சாத்து என்றாள் பாக்யா.

அவனிடம் நாளைக்கே வந்து வீட்டை மாத்தி கொடுக்கணும் எனவும் சொல்லி அனுப்புகின்றனர். கோபியும், ராதிகாவும் போன பிறகு வீட்டை மாமானார் பெயரில் மாத்தலாம் என பாக்யா சொல்கிறாள். ஆனால் அவர், என் பேர்ல மாத்துனாலும் அப்பா சொத்துல எனக்கு உரிமை இருக்குன்னு வந்து நிப்பான். வீட்டை உன் பேர்லயே மாத்திடலாம் என சொல்கிறார். ஈஸ்வரியும் அதையே சொல்கிறாள்.



இதனைக்கேட்டு பதறும் பாக்யா, என் பேர்ல எல்லாம் வேணாம். பசங்க பேர்ல மாத்தலாம் என சொல்கிறாள். ஆனால் எழிலும், செழியனும் நாங்க தான் உனக்காக ஏதாவது பண்ணனும் அம்மா. 

ரூமிற்கு போய் கடுப்புடன் சுவரில் ஓங்கி குத்தி கொண்டிருக்கிறான். ராதிகா வந்து சமாதனப்படுத்த, என்னலாம் பேசுற அவ. முன்னாடியெல்லாம் என்ன சொன்னாலும் மறு வார்த்தை பேச மாட்டா. இப்ப சம்பாதிக்கிறோம்ன்னு ஆணவம். சும்மா விட மாட்டேன். எப்படி என் குடும்பத்தை என்னையை விட்டு பிரிச்சாலோ, அதே மாதிரி அவளை விட்டு எல்லாரையும் பிரிக்கிறேன். ஏன் கேட்க கூட நாதி இல்லாம பண்ணுறேன் என சபதம் எடுக்கிறான்.
 
சீரியல் இருந்து இல்ல வீட்டுல இருந்து கெளம்பீட்டார்.