Anushka Shetty's Miss Shetty Mr Polishetty Movie Release Date postponed!!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி, இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான 'அருந்ததி' எனும் டார்க் ஃபேண்டஸி படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது.
பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
தற்போது அனுஷ்கா நடிப்பில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. பி.மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.
இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஒரு பெப்பி பாடலை பாட நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அனுஸ்கா நடித்திருக்கும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி' திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைத்திருப்பதாக படக்குழு அறிவிப்பு.விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்.