YOGI BABU'S LUCKY MAN MOVIE TEASER RELEASED!!
யோகி பாபு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஆவார்.
ஆண்டவன் கட்டளை (2016), கோலமாவு கோகிலா (2018), பரியேறும் பெருமாள் (2018) ஆகிய படங்களில் முத்திரை பதித்தார். ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்தார். அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
"இந்த உலகம் அழகானவர்களை ரசிக்கும், அறிவாளிகளை மதிக்கும், பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படும், அதிகாரம் உள்ளவர்களைக் கண்டு பயப்படும்" என்று ஒரு வாய்ஸ்ஓவருடன் டீஸர் தொடங்குகிறது.
ஆனால் எந்த நாளும் உழைப்பவர்கள் மீது மட்டுமே உலகம் நம்பிக்கை வைத்திருக்கும். அப்போது கார் ஷோரூமில் வேலை பார்க்கும் சாமானியராக நடிக்கும் யோகி பாபு அறிமுகமாகிறார்.
தற்போது அதே பெயரில் காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு நடிப்பில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். . படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள லக்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த் ஆகியோர் ரிலீஸ் செய்தனர்.