புதுமுக நடிகைகளை அறிமுக படுத்துவதில் மிக திறமைவாய்ந்த இயக்குனர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தவர்கள் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலசந்தர் அவர்கள். இவர்களின் டைரக்சனில் வெளிவந்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.
இவர்கள் அறிமுகபடுத்திய அனைத்து நடிகைகளும் எவர் கிரீன் ஸ்டாராக இன்று வரைக்கும் இருக்கின்றனர்.
அந்தளவிற்கு நடிப்பு மற்றும் திறமையில் அதிகளவு இருந்து, தமிழக திரை ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் சிகரம் பால சந்தர் அவர்கள் , அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்பொழுது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பெண்ணை அழைத்து, இவள் அழகாக இருக்கிறார்.
இவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நீ தான் என் அடுத்த படத்தின் நாயகி என்று கூறி விட்டு வந்தாராம்.
அதனை அடுத்து அவர் எடுத்த படம் அழகன். அந்த படத்தில் மறக்காமல் அந்த பெண்ணை நாயகி ஆக்கி அழகு பார்த்தார்.
அதன் பின் மணிரத்னம் இயக்குனர் இயக்கிய "ரோஜா" படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் உலகெங்கும் அவர் பிரபல்யம் அடைந்தார். இதனை யடுத்து சில படங்களில் மது பாலா நடித்து, அவரது சினிமா கரியரில் நீங்காத புகழை அடைந்தார்.