நடிகர் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்துவிட்ட தமிழ் நடிகர். ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து தமிழகம் மட்டுமல்ல உலகெங்கிலும் ரசிகர்களை பெற்றவர் நடிகர் விஜய்.
ஆரம்ப காலகட்டத்தில், சினிமாவில் அவருடைய அப்பா துணையுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்த விஜய், அதன் பிறகு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு புதிய பரிணாமத்தில் வளர்ந்து வந்தார்.
தற்பொழுது இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டைரக்டர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் தொடங்கப்படும் விஜய் 68 திரைப்படத்தின் புதிய கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் பவானி சங்கருக்கு இது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை தொடர்ந்து சக நடிகைகள் மற்றும் நட்பு வட்டாரத்தில் பவானி சங்கருக்கு இப்படி ஒரு வாய்ப்பா என்று பொறாமை , பொறாமை கொண்டுள்ளதாகவும் பல்வேறு நடிகைகள்
விஜய்க்கு ஜோடியாக நடிக்க காத்திருக்கும் இந்த நிலையில், இவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று பொறுமை தள்ளி வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.