மக்கள் செல்வன்னா ...சும்மாவா சொன்னாங்க.. விஜய் சேதுபதி செய்த நெகிழ்ச்சியான சம்பவம்..!



விஜய் சேதுபதி என்றாலே மக்கள் செல்வன் என்ற நல்ல பெயர் உண்டு. அவர் ரசிகர்களிடையே நெருங்கி பழகுவதாலும் அவர்களுடைய கஷ்டங்களை தெரிந்து கொண்டு உதவுவதால் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பெயர் ஏற்பட்டது.

சக மனிதர்களை நண்பர்களாக உறவினர்களாக பாவிக்கும் அவர்களது மனம் தான் இவ்வாறு அவரை அழைக்க காரணமாக இருந்தது.

makkal selvan sethupathi


ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வருவதற்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த விஜய் சேதுபதிக்கு பிறரின் கஷ்டத்தை புரிந்து கொள்வதற்கான தகுதியும் நல்ல எண்ணமும் உண்டு.
makkal selvan sethupathi


தொடர்ந்து சினிமாவில் கதாநாயகன் மற்றும் கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நற்பெயரை பெற்று வரும் விஜய் சேதுபதி, பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து வில்லனாக கூட அதை பாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்து வந்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் மலேசியா சென்று இருந்த பொழுது, அங்கு தன்னுடைய ரசிகர்களை சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணின் முகத்தின் சோகத்தை பார்த்து, என்ன ஏது என்று விசாரித்து அவருடைய கஷ்டத்தை தீர்த்துள்ளார்.



, அப்பெண்கூறியதாவது , தான் வீட்டு வேலைக்காக இங்கு வந்ததாகவும் தன்னை வேலைக்கு அமர்த்தி நிறுவனம் சரியாக கொடுக்காததால் தற்பொழுது கஷ்டத்தில் இருப்பதாகவும், ஊர் திரும்புவதற்கு கூட பண வசதி இல்லாமல் இருப்பதாக கூறி வருத்தப்பட்டார்.

இதனை தொடர்ந்து தான் பெண்ணுக்கு உதவி செய்வதாகவும், ஊருக்கு திரும்ப அதிகாரிகளுடன் பேசி ஏற்படும் செய்து விட்டிருந்தார்.

இப்படி மக்களின் கஷ்டங்களை பார்த்து உதவி செய்து வரும் அதை சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் சரியானதுதான்,