நடிகை குஷ்பூ பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் பாராட்டை பெற்றவர். தொடர்ந்து தமிழ் திரை உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்துக் கொண்டு தற்பொழுது வரை திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.
டைரக்டர் சுந்தரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரண்டு. பெண் பிள்ளைகள் உண்டு . சினிமாவை தொடர்ந்து முழு நேர அரசியல்வாதியாக மாறிய குஷ்பு ஆரம்ப காலகட்டத்தில் திமுகவில் இணைந்து கொண்டு பணியாற்றினார்.
அதனை தொடர்ந்து சில கட்சிகளில் தற்பொழுது பிஜேபியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில். குஷ்பூ தம்மை பற்றி இழிவாக பேசுவதாக அவர் மீது குற்றம் சாட்டை இருந்தார்.
அதனை தொடர்ந்து மீடியாவிற்கு பேட்டி அளித்த குஷ்பு தொடர்ந்து இதுபோன்ற பெண்களை அவதூறாக பேசுபவர்களுக்கு எதிராக நான் போராடுவேன் என்றும் எனக்காக மட்டும் அல்ல இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்காகவும் தான் இந்த போராட்டம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து திடீரென தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்ற ஒரு ட்விட்டர் போஸ்ட்டை பதிந்துள்ளார். அதில் தனக்கு முதுகு வலி என்றும் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்,
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. 🙏 pic.twitter.com/07GlQxobOI
— KhushbuSundar (@khushsundar) June 23, 2023