மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானவர் அமலா பால். அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து தனுஷ் மற்றும் விஜய் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த அமலா பால், சினிமா துறையில் பங்களித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் அதிகம் வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கு மலையாளம் கன்னடம் என வேற்றுமொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சினிமா மட்டும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
அவ்வப்பொழுது ஓய்விற்காக வெளிநாடு சென்று வரும் அமலா பால், கடற்கரை புல்வெளி மற்றும் இயற்கை காட்சிகள் மிகுந்த இடங்களுக்கு சென்று வந்து அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக இணையதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர்கள் ஏற்றுள்ள புகைப்படங்கள் தற்பொழுது பிரபலமாகி வருகிறது.
ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ரசித்து கருத்து எழுதி வருகின்றனர்.