மாமன்னன் படம் வெளிவந்து சில வாரங்கள் ஆன நிலையில், இன்னும் அப்படத்தை பற்றிய விமர்சனங்கள் குறைந்தபாடு இல்லை. உதயநிதி கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தில், நாயகன் நாயகியை விட, திரைப்படத்தில் இடம் பெற்ற மற்ற கேரக்டர்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் பகத் பாசில் நடிப்பு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பகத் பாசிலின் நடிப்பு திறமையை பாராட்டும் விதமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
அது ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்க, சத்தமே இல்லாமல் ஒரு கேரக்டர் மாமன்னன் படத்தில் ஸ்கோர் செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
ஃபகத் வாசலின் மனைவியாக நடித்த ரவீனா தான் அவர். ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போனாலும், வசனம் ஏதும் பேசாமல் குறிப்பிட்ட காட்சியில் மிகப் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவருக்கு இணையாக கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை. வெறும் இரண்டு பாட்டுக்கும் இரண்டு டான்ஸ்க்கும் கொண்டுவரப்பட்ட நாயகியாகவே கீர்த்தி சுரேஷ் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகை ரவீனா அவர்கள், ஒரு சில இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிப்படையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன ரவீனா அவர்கள் மாமன்னன் திரைப்படத்தில் நடித்தது குறித்து பல்வேறு தரப்பினரும் அவருடைய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.
0 Comments