நடிகர் வடிவேலுவுடன் அதிக படங்களில் இணைந்து நடித்த தமிழக மக்களை சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் ஜெயச்சந்திரன்.
சூர்யா திரிஷா நடித்த ஆறு திரைப்படத்தில் காமெடி நடிகராக வடிவேலுவுடன் இணைந்து நடித்திருப்பார்.
அதில் மறக்க முடியாத சில காட்சிகள் அமைந்திருக்கும். நடிகர் வடிவேலு அவரை பார்த்து என்னையா கழுத்தெல்லாம் ரத்தமாக இருக்கு என்று ஒரு ஆட்சியில் கேட்பார் அதற்கு... தண்டவாளத்தில் கொஞ்சம் அசந்து தூங்கிட்டு இருந்தேன்.. அசந்த நேரம் பார்த்து நாலு ரயில்கள் மேலே ஏறிப் போயிடுச்சு... என்று அவர் காமெடியாக கூறுவார். ஒரு ஒரு மனுஷன் தூங்குவது கூட தெரியாமல் இப்படி ரயில ஓட்டிட்டு போறாங்களே
அந்த காட்சி ரசிகர்களை மெய்மறந்து சிரிக்க வைத்தது.
முதல் நாள் சூட்டிங் சென்று விட்டு திரும்பிய நடிகர், அடுத்த நாள் அதிகாலையில் கழிவறைக்கு சென்றவர், திடீரென மயக்கம் போட்டு விழுந்து அடிபட்டது.
இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு எடுத்தும் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
காட்சிக்கு காட்சி மக்களை ரசிக்க வைத்த மாபெரும் காமெடி நடிகர் திடீரென உயிரிழந்தது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.