சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள்.. மேடை நடிகைகள், மாடலிங் துறையில் இருப்பவர்கள்.. மற்றும் எங்கெங்கிலும் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த உலகத்தில் மிகப்பெரிய பிரச்சனை பாலியல் தொல்லைகள்...
சின்னத்திரையோ பெரிய திரையோ.... அந்தந்த இடங்களில் அங்கங்கு நடிக்கும் நடிகைகளுக்கு அந்த சீரியல் அல்லது திரைப்படங்கள் தொடர்புடைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் உடன் நடிக்கும் நடிகர்கள், பைனான்சியர் போன்ற ஏதாவது ஒரு ஆண்களிடம் இருந்து அவ்வப்பொழுது இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன.
சிலர் வேறு வழி இல்லாமல் அதற்கு ஒத்துக்கொள்ள கூட முனைகின்றனர். மிகப் பலரோ அதற்கு நோமெண்ட்ஸ் நோ என்று அழுத்தம் திருத்தமாக மறுத்து விடுகின்றனர்.
இதனால் பாதையில் அந்த திரை தொடர் திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முடியாமல் கூட போவதும் உண்டு. அதற்கெல்லாம் பயப்படாமல் ஒழுக்க நெறியுடன் வாழும் நடிகைகளும் உள்ளனர்.
இப்படித்தான் நம்ம தனியார் டிவி ஒன்றில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை ஒருவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையானது செல்போன் வழியாக வந்தது என்று அவரே தெரிவித்துள்ளார்.
ஈரமான ரோஜாவே தொடர் இரண்டில் நடித்துக் கொண்டிருக்கும் மாமியார் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வேல்முருகி தான் இது போன்ற தொல்லை கொடுத்ததாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் கதை மற்றும் கதை தொடர்பான பேச்சுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் உங்களுக்கு தான் ஆனால் என்று பொடி வைத்துப் பேசும் பொழுது, அட்ஜஸ்ட்மென்ட் தானே.. அதற்கு வேறு ஆளை பார் என்று உடனடியாக அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவதாக அதில் தெரிவித்து இருந்தார்.
நடிகைகளில் இது போன்ற நல்ல நடிகைகளும் இருக்கின்றனர் என்பது ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.