என் உடல் மெலிவுக்கு இது தான் காரணம். முதன் முதலில் வாய் திறந்து உண்மையை சொன்ன ரோபோ சங்கர்

 சங்கர் திடீரென உடல் எடையைக் குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருந்தார் அதற்கான காரணத்தை முதன் முறையாக மனம் திறந்து கூறியிருக்கிறார்.


ரோபோ சங்கர்

நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.


இதனால் தான் இப்படி மெலிந்தேன்


அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.


தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது. ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார்.


ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறி விட்டார். உடல் எடைக்குறைந்ததற்கு அவருக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்து வந்தார்கள்.


இதனால் தான் இப்படி மெலிந்தேன்


இது தான் காரணம் 

 நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு தனது உடல்நிலைப்பற்றி கூறியிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,



நான் உடல் எடையை கொஞ்சம் குறைப்பதற்காக டயட்டில் இருந்தேன் அப்போது எனக்கு மஞ்சள் காமாளை நோய் வந்து விட்டது இதனால் உடல் எடை இன்னும் குறைந்தது.


இதனால் தான் இப்படி மெலிந்தேன்


நான் இந்த நோயால் கஷ்டப்பட்டபோது எல்லோரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். அதனால் தான் விரைவில் குணமடைய முடிந்தது.


மேலும், என் நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்தவன் நான். அது போல என் மனக் கவலையைப் போக்கி இந்த நோயில் இருந்து வெளியில் வர காரணமாக இருந்தது காமெடி ஷோக்கள் தானாம்.


அதிலும், ராமர் காமடியைப் பார்த்து உருண்டு உருண்டு விழுந்து சிரித்ததாகவும், கடந்த நான்கு மாதமாக காமடி நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து தான் பழைய நிலைமைக்கு வந்தேன் எனவும் தெரிவித்திருக்கிறார். 

Post a Comment

Previous Post Next Post