விஜே அர்ச்சனா அனைவரும் அறிந்த ஒரு மிக ச்சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் முதன் முதலில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சன் டிவியில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவருடைய ஆங்கரின் திறமையால் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய மகிழ்ச்சியும் பாராட்டையும் பெற்ற இவர் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார்.
அதன் பிறகு சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று மீண்டும் மக்கள் மத்தியில் வந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
அழுகைனிடையே அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார். சில காலமாகவே அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து
விடுவோம் என்ற மனநிலையில் இருந்ததாகவும், அதன் பின்னர் தங்களுடைய மகள் இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்ந்திட உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
விவாகரத்து பெறுவதன் மூலமாகவே குடும்பத்தில் நிலவும் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று நினைப்பது முட்டாள் தனம். பரஸ்பரம் இருவரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு இருக்கும் இறுக்கமான சூழ்நிலையை
தவிர்த்துவதன் மூலம் தான் ஒரு பிரச்சனை முடிவுக்கு வருமே ஒழிய, விவாகரத்து பெற்று ஆளுக்கு ஒரு திசையில் பயணிப்பதால் குடும்பம் சிதைந்து உறுப்பில் இருந்து விடும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி ஆக தெரிவித்தார்.