வசூல் ராஜா மாதிரி வசூல் வேட்டை ஆடும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் !!!

 வசூல் ராஜா மாதிரி வசூல் வேட்டை ஆடும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்!!!



சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான மாவீரன் படம் நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த மாவீரன் படம் ஜூன் 14ம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாளில் இருந்து மாவீரன் ஓடும் தியேட்டர்களில் கூட்டமாக உள்ளது.



மாவீரனும், மாவீருடுவும் சேர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். மாவீரன் படத்தை ரூ. 35 கோடி செலவில் எடுத்தார்கள். இந்நிலையில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ. 50 கோடி வந்துவிட்டது.

மேலும் மாவீரனுக்கு தளபதி விஜய்யின் ஆசி கிடைத்துவிட்டது. விஜய் தன் சார்பில் மனைவி சங்கீதாவை தியேட்டருக்கு அனுப்பி வைத்தார். மாவீரன் படம் ஓடிய தியேட்டரில் சங்கீதா விஜய்யை பார்த்த சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மகிழ்ச்சி அடைந்தார்.





சங்கீதாவும், ஆர்த்தியும் கையை பிடித்துக் கொண்டு சிரித்தபடி பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. படம் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் ஆர்த்தியிடம் பேசினாராம் சங்கீதா.

வெகுநாட்கள் கழித்து சங்கீதாவை நேரில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இத்தனை நாட்களாக உங்களை பார்க்கவே முடியலயே அண்ணி என்றார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு பட வசூலை மாவீரன் முந்திவிட்டதாக தகவல் வெளியானது. வாரிசு படம் ரிலீஸான இரண்டாம் நாள் அமெரிக்காவில் மட்டும். ரூ. 4 கோடி வசூல் செய்தது. ஆனால் மாவீரனோ இரண்டாம் நாள் ரூ. 5 கோடி வசூலித்திருக்கிறது.