பாதியில் நின்றுபோன ராஷ்மிகா திருமணம்.. முன்னாள் காதலன் அளித்த பேட்டி...

 பாதியில் நின்றுபோன ராஷ்மிகா திருமணம்.. முன்னாள் காதலன் அளித்த பேட்டி...

rashmika marriage news


ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம் பாதியிலேயே நின்றுபோனது.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் எது உண்மை என்று இதுவரை தெரியவில்லை. இதன்பின் முழுமையாக தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், ராஷ்மிகா திருமணம் செய்யவிருந்த நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

rashmika marriage news



இதில் "ராஷ்மிகாவும் நானும் தற்போது கூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு தற்போது நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்" என பேசியுள்ளார் ரக்ஷித் ஷெட்டி.

ராஷ்மிகா குறித்து இவர் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.